திருச்சி சிவாவுக்கு தி.மு.க.வை எழுதிக் கொடுத்திட்டாங்களா..? டென்ஷனில் தி.மு.க.

மாநிலங்களவை சீட் யாருக்கு என்று பெரிய பரபரப்பு கிளம்புவதற்கு முன்னதாகவே முந்திக்கொண்டு சட்டென்று சீட் யாருக்கு என்று அறிவித்துவிட்டது தி.மு.க. அப்படி அறிவித்துவிட்டாலும், அந்த அறிவிப்பைக் கண்டு உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர்.


இப்போது திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகிய மூன்று பேருக்கு தி.மு.க. கோட்டாவில் மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத நபர் என்றால் அந்தியூர் செல்வராஜ்தான். 

ஆதிதிராவிடர் ஒருவருக்கு மாநிலங்களவையும் சீட் வழங்கவேண்டும் என்பதற்காகவே அந்தியூர் செல்வராஜுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவரது சொந்த கிராம்ம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட நல்லாந்தொழுவு. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவரது மனைவி பாப்பாத்தி.கஸ்தூரி, மோகனா என இரண்டு மகள்,மற்றும் பரமசிவம் என்ற மகனும் உள்ளனர்.

தற்போது கட்சியில் ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளராக உள்ளார். ஒருங்கிணைந்த மாவட்டத்தில் துணை செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தி.மு.க சார்பில் அத்தியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அரசில் கதர்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவரது மகள் கஸ்தூரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக உள்ளார். இவரது மகன் பரமசிவம் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார்.

இவருக்குக் கொடுக்கப்பட்டதிலும், என்.ஆர்.இளங்கோவுக்குக் கொடுக்கப்பட்டதிலும் தி.மு.க.வினருக்கு சந்தோஷமே. ஆனால், மீண்டும் திருச்சி சிவாவுக்குக் கொடுக்கப்பட்டதைத்தான் யாராலும் ஏற்க முடியவில்லை. ஏன் என்றால் தொடர்ந்து 5வது முறை நாடாளுமன்றம் செல்கிறார் திருச்சி சிவா. இதில் நான்கு முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நன்றாக பேசக்கூடியவர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமா? கட்சியில் அந்தப் பதவியை பெற வேறு யாருக்கும் தகுதியே இல்லையா என்று உடன்பிறப்புகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சரியான கேள்விதான்.