காங்கிரஸ்காரர்களை கேவலப்படுத்தும் தி.மு.க...! வேதனையில் மிதக்கும் கதர்சட்டைகள்.

இந்த தேர்தலில் வேன்டாவெறுப்பாகத்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு 25 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறது தி.மு.க. ஆனாலும், அவர்களை கூட்டணிக் கட்சியாகவே தி.மு.க. மதிக்கவில்லை என்று வருந்துகிறார் காங்கிரஸ்காரரான ஜி.கே.முரளிதரன்.


இதோ, அவரது பதிவில் இருந்து ஒரு பகுதி. 

இன்று மண்ணச்சநல்லூர் தொகுதி மண்ணச்சநல்லூர் கல்பாளையம் வழியாக ஈச்சம்பட்டிக்கு சென்றிருந்தேன்... திமுக வேட்பாளர் தம்பு கதிரவனுக்காக வாக்களிக்கச் சொல்ல!

நூறு சதவிகித இஸ்லாமியர்கள் வாழும் பகுதி மதரஸாக்களே மூன்றிற்குமேல் உள்ளது....

வெளிநாட்டு பணியாளர்களின் கொடையால் குட்டி சிங்கப்பூராய் ஜொலிக்கிறது....

என்னோடு உடன் படித்த முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் நம்மவர்கள் இங்கு உள்ளனர்...

வலுவான நட்புக்கு உதாரண மனிதர்கள்.... பள்ளிவாசலுக்குப்போனேன் ஹஜ்ரத் ஒருவர் கேட்டார் 

"ஏன் சாமி நீங்க டிஎம்கே கூட தானே இருக்கீங்க?" 

"ஆமாம் அத்தா"

அப்பறம் ஏன் ஸ்டாலின் அவர்மகன் கனிமொழி கூட்டத்துல எல்லாம் காங்கிரஸ் கொடியே கானோம்? ஜிக்ஷில தட்டுப்படவே இல்லியே.... அதப்பார்த்தாதான் நீங்க ஒன்னா இருக்கீங்கனு ஒரு நம்பிக்கையே வரும்"....

நியாயமான கேள்விதான்.

யாரிடமும் இதற்கு விடை இல்லை கூட்டத்தில் "காங்கிரஸ் கொடியெல்லாம் கொண்டுவராதீங்கய்யா, எல்லாம் நாங்களே பார்த்துக்கிறோம்" என்பார் திமுக மாவட்டச் செயலாளர்

நம்ம ஆளும் வேலை மிச்சம்னு ...கைல புடிச்சுகிட்டு போய்டுவான்

அப்படியே ஆர்வக்கோளாருல யாராவது காங்கிரஸ் கொடி வச்சுறுந்தா திமுக தொண்டன் "யோவ் கொடிய இறக்குய்யா மறைக்குது" என்று அதை கீழே போடும்வரை விடமாட்டான்....நாங்க என்ன அத்தா பன்றது" என்றேன்.

திமுக காங்கிரஸ் ஒன்னா இல்லையோனு கேட்டேன்... நான் கேட்டுட்டேன் 

நிறைய பேரு கூட்டணி இல்ல போலருக்குன்னு முடிவே பன்னிருவான்....

இப்போ எடப்பாடியார் ஓபிஎஸ் கூட்டங்கள்ல பாருங்க அதிமுக கொடிய விட பாஜக பாமக கூட்டணி கட்சிகொடிதான் ஜம்முனு தெரியுது. நீங்க டிஎம்கேவ அவங்கள பார்த்து கத்துக்கிட சொல்லுங்க" என்றார்...

இதை யார் ஸ்டாலினிடம் போய் சொல்வது..? தடுமாறி நிற்கிறது காங்கிரஸ்.