திமுக இளைய தலைவரின் இரும்பு ஆலையில் பயங்கரம்! பாய்லர் வெடித்து உடல் கருகி உயிரிழந்த 4 தொழிலாளர்கள்! மூடி மறைக்க முயற்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது நோபல் டெக் ஸ்டில் எனும் இரும்பு தொழிற்சாலை.


 இந்த தொழிற்சாலை திமுக இளைய தலைவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. திமுக இளைய தலைவரின் இந்த இரும்பு தொழிற்சாலையை பினாமி பெயரில் நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.

இந்த தொழிற்சாலையில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஆங்காங்கே இருந்து திறக்கப்படும் இரும்புகளை இங்கு உறுக்கி தேவையான வடிவத்தில் மாற்றி ஏற்றுமதி செய்யும் பணி நோபல் tech ஸ்டீல் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று தொழிற்சாலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பாய்லர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சுமார் எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மேலும் 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற காரணத்தினால்தான் 4 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே திமுக இளைய தலைவரின் பினாமி நிறுவனம் என்பதால் இந்த விபத்தை அப்படியே மூடி மறைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.