தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேரு சொத்து ஏலத்துக்கு வந்தாச்சு! விஜயகாந்த் போலவே இவர்கிட்டேயும் பணம் இல்லையாம்!

விஜயகாந்த் சொத்து திடீரென ஏலத்துக்கு வந்தபோது தமிழகமே அதிர்ந்து நின்றது. ஏனென்றால் வெறுமனே 5 கோடி ரூபாய் கட்டாமல் வங்கியை ஏமாற்றிக்கொண்டு இருந்தார்கள்.


அதேபோன்ற ஒரு நிலையில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் நிகழ்ந்துள்ளது.நவம்பர் 14ம் தேதி நேருவின் சொத்துக்களை ஏலத்துக்கு விட இருப்பதாக இந்தியன் வங்கி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது.

நாராயணன் எஜூகேஷனல் டிரஸ்ட்க்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாகவும், அந்த டிரஸ்டில் என்.ரவிச்சந்திரன், அருண் நேரு, கே.என்.மணிவண்ணன், கே.ஆனந்த், ஆர்.வினீத் நந்தன் ஆகியோ இருக்கிறார்கள்  வங்கிக்கு 109 கோடி ரூபாய் கட்டவேண்டிய பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த டிரஸ்டில் உள்ள அனைவருமே நேருக்கு நெருக்கமான உறவுகள்தான்.

நேருவிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. அவர் நினைத்தால், இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தடுத்து இருக்கலாம் என்று கட்சியினரே பேசுகிறார்கள். தன்னை மீறி யாரும் ஏலம் எடுக்க வர மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் அமைதியாக இருக்கிறாராம்.

பார்த்துங்க, மோடியோட ஆட்கள் யாரும் தூக்கிட்டுப் போயிடப் போறாங்க.