உதயநிதிக்கு ட்வீட்க்கு அமைச்சர் ஜெயகுமார் தெறிக்கவிடும் பதில்..! தி.மு.க. குடும்பமே பிளே பாய்தான்..!

ராஜேந்திரபாலாஜியின் முதல்வர் அறிவிப்பு, வி.பி.துரைசாமியின் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி, எஸ்.வி.சேகர் தேசியக் கொடி அவமதிப்பு மற்றும் உதயநிதியின் ட்வீட் என்று எக்கச்சக்க விஷயங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து தூள் கிளப்பினார்.


முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கருத்து சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறுவது கட்சியின் கருத்து அல்ல. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது கூறுவது ஆரோக்கியமான கருத்தாக இருக்காது. அது குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

வி.பி.துரைசாமி எழுப்பிய கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மேலும் கூட்டணி பற்றி பேசுவதற்கு துரைசாமி ஒன்றும் தமிழக பா.ஜ.க. தலைவரோ அல்லது டெல்லி மேலிடமோ அல்ல; என்றும் தட்டிக் கழித்தார்.

எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பிய நேரத்தில், ’எஸ்.வி.சேகருக்கு நீண்ட நாட்களாகவே சிறையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும்’ என்று கூறினார்.

உதயநிதி ட்வீட் குறித்து கேட்டபோது, ‘உதயநிதி ஸ்வீட்டானவர் என்பதை சொல்வதற்கே நான் சாக்லேட் பாய் என்று கூறினேன். ஆனால், அவர் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். உண்மையில், தி.மு.க.தான் ப்ளே பாய் குடும்பம் என்று தெறிக்க விட்டார்.