மகனை மக்களுக்கு தத்துக் குடுத்துட்டேன்! பில்டப் துரைமுருகனிடம் சொத்தை கேட்டு கொந்தளித்த உடன்பிறப்புகள்

நடிப்பதில் துரைமுருகனை யாரும் விஞ்சவே முடியாது. நேரத்துக்குத் தகுந்த மாதிரி, ஆளுக்குத் தகுந்த மாதிரி பேசுவதில் கெட்டிக்காரர்.


 அதனால்தான் இத்தனை நாளும் கருணாநிதி குடும்பத்துக்குள் காலம் தள்ள முடிந்தது. தனக்குப் பின் தன்னுடைய மகன் இந்த நாட்டை காப்பாற்ற (?) வேண்டும் என்ற ஆசை துரைமுருகனுக்கு வந்தது.

அவரது ஆசையை ஒருவழியாக ஸ்டாலினும் நிறைவேற்றித் தந்துவிட்டார். ஆனால், தொண்டர்கள்தான் கொந்தளித்துவிட்டார்கள். இத்தனை வருடங்கள் துரைமுருகனுக்கு ஜே போட்டு வீணாகப் போனோம், அதேபோன்று எங்கள் தலைமுறையினரும் துரைமுருகன் மகனுக்கு ஜே போட்டு ரோட்டிலேயே கிடக்க வேண்டுமா என்று கொந்தளித்தார்கள்.

இதை அறிந்துகொண்ட துரைமுருகன் உடனே தன்னுடைய நாடக முகமூடியை எடுத்துக்கொண்டு இன்று தொகுதிக்குள் வந்துவிட்டார். ‘என் பிள்ளையை மக்களின் பிள்ளையாக கையெழுத்துப் போட்டு தத்துக் கொடுத்துவிடுகிறேன். என் மகன் கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்தால் குடியாத்தம் மேற்கே வாணியம்பாடி அருகே தொழிற்பேட்டை அமைத்துத் தரப்படும் என்று பேசி மகனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டார்.

மகனை மட்டும் தத்துக் குடுத்தா போதுமா, அவர் பேரில் இருக்குற சொத்துக்களையும் குடுத்துடுங்க, ஜெயிச்ச வைச்சிடுறோம் என்று தி.மு.க. உடன்பிறப்புகள் அவர் இருக்கும்போதே நக்கல் அடித்திருக்கிறார்கள். மனுஷன் கில்லாடியாச்சே, கண்டுகொள்ளாமலே போய்விட்டார்.

சொத்துன்னா சும்மாவா?