ஐ-பேக் அட்டகாசம் தாங்க முடியலைங்க… டென்ஷனில் கொதிக்கும் தி.மு.க. நிர்வாகிகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமுக்கு 350 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது தி.மு.க. ஏகப்பட்ட சர்வேக்களை மட்டுமே கொடுத்திருக்கும் ஐபேக், இப்போது கட்சி நிர்வாகிகளை சொந்தமாக செயல்பட விடுவதில்லை என்ற புகார் தமிழகமெங்கும் எழுகிறது.


மேலும் வேட்பாளர் தேர்வில் ஆதாயம் பார்த்த ஐபேக் நிர்வாகிகள் குறித்தும் தொடர்ந்து புகார் வருகிறது.. ஒவ்வொரு பகுதியிலுமுள்ள வெயிட்டான பார்ட்டிகளை தொடர்புகொண்ட ஐபேக் ஆட்கள், ‘’ உங்க தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலில் உங்க பெயரையும் பரிந்துரை செய்திருக்கிறோம். அதனால நீங்க எங்களை கவனிச்சா உங்க பெயர் பட்டியலில் வரும்..’’ என ஆசை காட்டி வசூல் செய்தனர். 

இதை பணம் கொடுக்காத ஒருபுண்ணியவான், கட்சி மேலிடத்துக்கு ஆதாரத்துடன் எடுத்துப் போட்டுவிட்டார். தலைமை இது பற்றி ஐபேக் நிறுவனத்திடம் விசாரிக்க, ’எங்கள் பெயரை யாரோ தப்பா யூஸ் பண்ணிட்டாங்க’ என சொல்லி சமாளித்திருக்கிறார்கள். 

வெறுமனே ஐடியா என்ற பெயரில் எங்களை எல்லாம் கொடுமைப்படுத்துகிறது ஐபேக் டீம் என்பதுதான் தி.மு.க. நிர்வாகிகள் சொல்லும் கருத்து. இதுகுறித்து, ‘’ஐபேக் இங்கே கால் பதித்ததில் இருந்து எங்களுக்கு செலவும், வேலைப்பளுவும் அதிகமாகிவிட்டது. கொரோனா கால நிவாரண உதவிகளில் தொடங்கி இப்போது நடந்துவரும் இணையவழி தேர்தல் பிரச்சார கூட்டங்கள் வரை எல்லாமே ஐபேக் ஐடியாக்கள்தான்.

வெறும் கட்சிக்காரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறோம். தலைமை வழக்கம்போல எதுவும் தர்றதில்லை. இதில இதை அப்படி செய்; அதை இப்படி செய்யுண்ணு ஐபேக் ஆட்கள் அதிகாரம் வேற பண்றாங்க. பொது மக்கள் பங்கேற்காத இந்த நிகழ்ச்சிகளால் எந்த பிரயோசனமும் இல்லை’’ என்று புலம்புகிறார்கள்.

பாவம், இதை கேட்கத்தான் யாருமில்லை.