மோடி வில்லன்! ஓபிஎஸ்-இபிஎஸ் கைக்கூலிகள்! ஹீரோ எங்க அப்பா! உதயநிதி காட்டிய புதுப்படம்!

தமிழ்நாட்டில் மோடிக்கு எதிர்ப்பு அலையும், ஸ்டாலினுக்கு ஆதரவு அலையும் வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்.


நமக்கு நாமம் போட்ட மோடிக்கு வரும் 18- ஆம் தேதி நாம் நாமம் போட வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரையும், நீட் பலிகொண்ட மாணவி அனிதா மரணத்தையும் மறக்க கூடாது. திமுக-வின் தேர்தல் அறிக்கை தான்  கதாநாயகன். கதாநாயகன் இருக்கும்போது ஒரு வில்லனும் இருப்பார். அவர்தான் மோடி.

அவர்களின் கைக்கூலிகள் தான் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ். காமெடியன் அன்புமணி ராமதாஸ். அன்புமணி என்னை ஸ்டாலினின் கொடுக்கு என்கிறார். நான் கொட்ட கொட்ட அவர்களுக்கு வலிப்பதால் நான் ஸ்டாலினின் கொடுக்கு தான். திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெறும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.