வேட்பாளர்களுக்கு பொக்லைன் மூலம் மலர்தூவி விபரீதம்! கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா வைகுண்டம் தான்!

சென்னை: திமுக வேட்பாளர்கள் மீது பொக்லைன் இயந்திரத்தில் மலர்கள் தூவி வரவேற்றது, பார்ப்பவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு, திமுக சார்பாக, செல்வம் போட்டியிடுகிறார். இதேபோல, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பாக, இதயவர்மன் போட்டியிடுகிறார். இவர்கள் 2 பேரும்,  கேளம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பு செய்தனர். அப்போது, கேளம்பாக்கம் பகுதி மக்கள், அவர்கள் மீது பொக்லைன் இயந்திரம் மூலமாக, மலர் தூவி வரவேற்றுள்ளனர். 

இதைப் பார்க்கும்போது, பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. தவறி, பொக்லைன் இயந்திரம் வேட்பாளர்கள் மீது பட்டிருந்தால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. இத்தகைய விபரீதத்தை, திமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டாம் என, நேரில் பார்த்தவர்கள் வலியுறுத்துகின்றனர். 

பெண்களை வைத்து, கைகளால் மலர் தூவி வரவேற்பதே, வழக்கம். இந்நிலை மாறி, பொக்லைனில் மலர் தூவுவது, தேவையற்ற விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதே, நமது கருத்தும்...