தமிழகத்தின் முன்னணி செய்து தொலைக்காட்சியான புதிய தலைமுறை நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய தலைமுறை டிவியின் விறுவிறு கருத்துக்கணிப்பு! திமுக - அதிமுகவுக்கு எத்தனை எம்பிக்கள்?

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலையான தொலைக்காட்சி என்று கூறிக் கொண்டாலும் அந்த தொலைக்காட்சியின் உரிமையாளரான பாரிவேந்தர் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆவார். இப்படி தங்கள் உரிமையாளர் திமுகவில் இருந்தாலும் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை கருத்துக் கணிப்பின் படி தமிழகத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 28 முதல் 33 இடங்களில் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 7 முதல் 12 தொகுதிகளை மட்டுமே அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி கூறியுள்ளது.
ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பை ஏற்க முடியாது என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திமுகவின் பெரம்பலூர் வேட்பாளரான பாரிவேந்தரின் புதிய தலைமுறை தொலைக்காட்சி எப்படி நடுநிலையான ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டிருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.