திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள்! உடன்பாடு கையெழுத்து!

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடந்த இரண்டு வாரங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த தொகுதிகள் என்று பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இரண்டு தொகுதிகளிலும் விசிக உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையை ஏற்றதை தொடர்ந்தே 2 தொகுதிகள் ஒதுக்கி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதனை திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஓரிரு நாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.