முல்லைவேந்தன் முதல் மாலை ராஜா வரை… ரஜினி பக்கம் சாயப்போகும் தி.மு.க. வி.ஐ.பி.கள். அலறும் ஸ்டாலின்.

என்றைக்கு கட்சி தொடங்குவது உறுதி என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டாரோ, அப்போது முதலே ஸ்டாலின் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு அலறிக்கொண்டு இருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம்.


ஏனென்றால், ரஜினி மற்றும் ரஜினிக்கு நெருக்கமானவர்களைத் தொடர்புகொண்டு கட்சியில் இணைய அப்ளிகேஷன் போடுபவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் தி.மு.க.வினர் என்பதுதான் ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியான தகவல்.

மாஜி மந்திரிகள், மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயல்பட முடியாமல் வேறு வழியின்றி திமுகவில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிருப்தியாளர்கள் என ஏராளமான நபர்கள் கட்சி தாவ தயார் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக வடக்கே முல்லைவேந்தன் தொடங்கி தெற்கே மாலைராஜா வரை ஒரு நீண்ட பட்டியலே ரஜினியின் கைக்குப் போயிருக்கிறதாம்.

கொஞ்சம் பொறுமையா இருங்க, நானே கூப்பிடுகிறேன் என்று அனைவரையும் அமைதிப்படுத்தி வைத்திருக்கிறாராம் ரஜினி. மீண்டும் ஆட்சி என்ற கனவில் ரஜினி மண்ணள்ளிப் போட்டுட்டாரே என்பதுதான் ஸ்டாலினின் வருத்தம்.