மீண்டும் சிகிச்சை! அமெரிக்கா பறக்கிறார் கேப்டன்! அய்யோ என்னாச்சு?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவுள்தாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்து விடலாமா என பிரேமலதா ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் சிகிச்சை  பெற விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுண்ட சென்றிருந்தார். அங்கிருந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை டுவிட்டரில் அனுப்பியதல் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தனர். 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பிரேமலதா பிரச்சாரம் செய்தார். 

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் பிரசாரம் ஓய்வதற்கு முதல் நாளும் ஓய்ந்த அன்றும் 3 தொகுதிகளில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அவரால் முன்பு போல் பேச இயலாததால் வேனில் அமர்ந்தபடியே ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார். 

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைகளுக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் பிரேமலதாவும் செல்லவுள்ளதால் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தவிர்க்கலாமா அல்லது அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்கலாமா என பிரேமலதா யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.