நீ முதல்ல என்னுட்ட விவாதத்துக்கு வா! அப்புறம் அன்புமணிட்ட போகலம்! உதயநிதிக்கு கேப்டன் மகன் சவால்!

விருதுநகர்: ''உதயநிதி என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா,'' என்று விஜயகாந்தின் மகன் சவால் விடுத்துள்ளார்.


அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஆகியோர் நேரடியாக விவாதிக்க வரும்படி, ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்புமணிக்கு ஆதரவாக, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் களமிறங்கியுள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து, டி.கல்லுப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த அவர் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:

என் தந்தை விஜயகாந்த் குணமாவது, மக்களின் கைகளில்தான் உள்ளது. இந்த தேர்தலில், தேமுதிக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றிபெற்றால், அந்த மகிழ்ச்சியில் அவரது உடல்நிலை தேறிவிடும். 8 வழிச்சாலை பற்றி விவாதிக்க தயாரா என்று அன்புமணிக்கு, உதயநிதி சவால் விட்டு வருகிறார். அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன்.

இலங்கையில், ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், அதில் அன்புமணிக்கு உள்ள தொடர்பு பற்றியும் என்கூட அவர் விவாதிக்க தயாரா? இவ்வாறு விஜய பிரபாகரன் சவால் விடுத்துள்ளார்.