சூரிய கிரகண நேரத்தில் விருந்து சாப்பாடு! வம்பு இழுக்கும் தி.க.வினர்!

இந்துக்கள் மதம் தொடர்பான எந்த ஒரு விவகாரம் என்றாலும், இழுத்துவைத்து கிண்டலும் கேலியும் செய்வது தி.க.வினரின் பழக்கம்.


அப்படித்தான் நாளை நடக்க இருக்கும் கிரகணத்தை வைத்தும் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது தி.க. 26.12.2019 அன்று சூரியகிரகணம் நிகழும்போது உணவருந்தக் கூடாது, அது தோஷம் என்று ஒரு நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதை எதிர்த்து சென்னை பெரியார் திடலில் சூரியகிரகணத்தின்போது விருந்து சாப்பிடப் போகிறார்கள்.

ஆம், 26.12.2019 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திடலில் சிற்றுண்டி சாப்பிட்டு சூரிய கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கப் போகிறார்களாம். இதேபோன்று தமிழகத்தின் பல இடங்களிலும் விருந்து நடக்கப்போகிறதாம்.

நல்லா இருந்தா சரிதான்.