பெற்ற குழந்தையை காருக்குள் வைத்து எரித்த கொடூர தந்தை! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

அமெரிக்காவில் விவாகரத்தான தம்பதியிடையே பெண் குழந்தையை யார் பராமரிப்பில் வைத்துக்கொள்வது என ஏற்பட்ட சண்டைக்கிடையே அந்தப் பெண் குழந்தை காருடன் சேர்ந்து மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


குயீன்ஸ் நகரைச் சேர்ந்த செரோன் கோல்மன் என்ற பெண்ணுக்கும் மார்ட்டின் பெரைராவுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பெண் குழந்தை ஸோயி கணவன் மார்ட்டினுடன் இருந்த நிலையில் குழந்த யாரிடம் வளர்வது என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.

மார்ட்டின் மன நலம் குன்றியவரைப் போல நடந்துகொள்வதாலும் அவரால் தனது குழந்தைக்கு ஆபத்து நேரக் கூடும் என செரோன் கோல்மன் கூறியதைப் பொருட்படுத்தாமல் நீதிபதி மார்ட்டினுடனேயே குழந்தை வாழ தீர்ப்பளித்தார். 

இந்நிலையில் ஏரிக்கரை ஒன்றின் அருகில் மார்ட்டினின் கார் திடீரென திப்பிடித்து எரிந்த நிலையில் காரி இருந்து குதித்து மார்ட்டின் தப்பினார். காரின் பின் சீட்டில் உடல் கருகி உயிருக்குப் போராடிய ஸோயியை தீயணைப்புத்துறையினர் மருத்துவமனியில் அனுமதித்தனர். ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

மேலும் அது விபத்து போன்று தோன்றவில்லை என்றும் திட்டமிட்ட கொலை போன்று இருந்ததாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமி கார் சீட்டுடன் சேர்த்து கட்டப்பட்டிருந்ததாகவும், கார் கதவும் யாரும் திறக்க முடியாதபடி உள்புறமாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். 

மேலும் கார் தீப்பிடித்து எரியும் முன் பெரைரா தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ண்டு உனது மகளை நீ இனி காணவே முடியாது என மிரட்ட விடுத்ததாக கோல்மன் தெரிவித்தார். இவற்றின் அடிப்படையில் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.