இன்னொரு ஆணுடன் படுக்கையில் இருந்த காதலன்! நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரபல நடிகை திஷா பட்டானி ஏன் தனது காதலனை பிரிந்தார் என்பதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.


 தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் திஷா படானி. இவர் சுந்தர் சியின் சங்கமித்ரா படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது இவர் முன்னணி நடிகர் டைகர் ஷ்ராப்புடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால் இதற்கு முன்னதாக திஷா டிவி நடிகரனா பர்த் சம்தானுடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். சுமார் 3 வருடங்கள் திஷா - பர்த் சம்தான் உறவு நீடித்தது. பின்னர் அவர்கள் பிரிந்தனர். இந்த பிரிவுக்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார் திஷா.

அதாவது லிவிங் டுகெதரில் இருக்கும் போதே ஒரு முறை தன்னை பர்த் ஏமாற்றியதாகவும் அதனை தான் மன்னித்ததாகவும் திஷா கூறியுள்ளார். ஆனால் மீண்டும மீண்டும் ஏமாற்றியதால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று திஷா கூறினார். சரி அப்படி யாருடன் தான் பர்த் ஏமாற்றினார் என்ற கேள்விக்கு திஷா அளித்த பதில் தான் ஷாக்கிங் ரகம்.

அதாவது சக டிவி நடிகரான விகாஷ் குப்தாவுடன் படுக்கையில் தனது காதலன் பர்த் இருந்ததை பார்த்து தான் அதிர்ந்துவிட்டதாகவும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரிந்து விலகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.