கீழ் உள்ளாடை இல்லாமல் வரச் சொன்னார் இயக்குனர்! நானும் சென்றேன்! நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்!

பட வாய்ப்புக்காக இயக்குனரிடம் சென்ற போது உள்ளாடை ஏதும் அணியாமல் அப்பட்டமாக அப்படியே போஸ் கொடுக்கச் சொன்ன இயக்குனர் பற்றி தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்.


 பாலிவுட்டில் மிகத் திறமையாகவும், வித்தியாசமாகவும் சவாலான கேரக்டர்கள் எடுத்து நடிப்பவர் கங்கனா ரணாவத். இவர் அடிக்கடி பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர்.

 இந்நிலையில் சமீபத்தில் ஐ லவ் யூ பாஸ் என்ற ஒரு படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது அங்கே தனக்கு என்ன நேர்ந்தது என்று பேசியுள்ளார்.

 பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் முன்னாள் சென்சார் போர்டு தலைவருமான பஹ்லஜ் நிஹலானி அந்த படத்தின் இயக்குனர் ஆவார். கங்கனா ரனாவத் அந்த படத்தின் ஆடிசனுக்கு சென்றபோது பெண்கள் இரவில்  அணியும் ஒரு ஆடையை மட்டும் அணிந்து கொண்டு உள்ளே ஏதும் உள்ளாடை போடாமல் அப்படியே போஸ் கொடுக்க அந்த இயக்குனர் கூறியிருக்கிறார். மேலும், உள்ளாடை அணியாமல் கால்கள் மட்டும் வெளியே தெரியுமாறு கங்கனா ரணாவத்தை போஸ் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் பஹ்லஜ் நிஹலானி.

 பின்னர் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று தப்பித்து ஓடினேன். மேலும் எனது போன் நம்பரையும் மாற்றி விட்டேன் என்று கூறியுள்ளார் கங்கனா ரணாவத்.