கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் உறியடி. இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யா முன்பு கண் கலங்கிய விஜய்! பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. உறியடி படத்தின் 2வது பாகத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். முதல்பட வெற்றியால் ஈர்க்கப்பட்ட 2ம் பாகத்தை சூர்யா தயாரித்துள்ளார்.
உறியடி 2 படத்தில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் படத்தின் இயக்குனர் விஜயகுமார் சூர்யாவின் தயாரிப்பு பற்றி நிகழ்ச்சியாக பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு 200 படங்கள் தயாராகிறது அதில் 150 படங்கள் பல பெரிய பிரச்சனைகளுக்கு பின் நிறைய வெளியாகிறது.
ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் அப்படி எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் மிக எளிதாக படத்தினை தயாரித்து முடித்து விட்டோம். அதற்கு சூர்யா சார் தான் காரணம். இது மிகப்பெரிய நன்றி என்று சூர்யாவிற்கு முன்னதாக இயக்குனர் விஜயகுமார் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பேசிக் கொண்டிருந்த போதே இயக்குனர் விஜய் கண்களில் கண்ணீர் ததும்பியது. ஏனென்றால் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றாலும் அதனை முறையாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.