சிம்புவின் மாநாடு படத்தை தூக்கி கடாசிய வெங்கட் பிரபு! காஜலுடன் இணைந்து புது புராஜக்ட்!

இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


 இந்த திரைப் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.

இதில் நடிகர் சிம்பு, நடிகை கல்யாணி பிரியதர்ஷினி உடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படமானது அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட த்ரில்லர் படமாக உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படங்களை மட்டும் இயக்காமல் வெப் சீரிஸ்களையும் இயக்க தயாராகி உள்ளார்.  

வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸ்கலில்  நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் வைபவ்  கைகோர்த்துள்ளார். 

நடிகை காஜல் அகர்வால் கடைசியாக இளைய தளபதி விஜய் உடன் மெர்சல்  திரைப்படத்தில் நடித்திருந்தார் . தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள கோமாளி திரைப்படத்திலும் காஜல் அகர்வால் நடித்துள்ளார் . 

மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் என்றே கூற வேண்டும் . இதேபோல் நடிகர் வைபவ் கடைசியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது இந்த வெப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் மொத்தம் 10 எபிசோடுகளை கொண்டுள்ளது. இந்த கதை முதலில் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஆனால் இப்போது இதே கதை web series ஆக ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது .