செக்ஸ் புகார்! லீனா மீது டைரக்டர் சுஷி கணேசன் பகீர் வழக்கு!

சென்னை: லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.


சமீபத்தில், #MeToo என்ற பெயரில் நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், அதற்கு காரணமான நபர்கள் மீது புகார் தெரிவித்து வந்தனர். இதில் சின்மயி, வைரமுத்து விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்போது, எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான லீனா மணிமேகலை, சினிமா இயக்குனர் சுசி கணேசன் மீது செக்ஸ் புகார் எழுப்பியிருந்தார்.

கடந்த 2018 அக்டோபரில் இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதே இதனை கண்டித்த சுசி கணேசன், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார். 

இதன்படி, தற்போது சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சினிமா வாய்ப்பு கேட்டு லீலா மணிமேகலை தன்னிடம் 13 ஆண்டுகளுக்கு முன் பேசினார். ஆனால், அவரது சமூக பார்வை மிகவும் அருவறுப்பான வகையில் இருந்ததால், நான் வாய்ப்பு தர மறுத்துவிட்டேன்.

இந்நிலையில், அவரை நான் பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு, வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாக, லீனா மணிமேகலை புகார் கூறியுள்ளார். இது பொது வெளியில் எனது நற்பெயரை கெடுத்துவிட்டது. இதுபற்றி உரிய ஆதாரம் சமர்ப்பிக்கும்படி நான் லீலாவை கேட்டேன். ஆனால், அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. நான் ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. லீனா மணிமேகலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் உரிய நஷ்ட ஈடு பெற்று தரவேண்டுகிறேன், என்று சுசி கணேசன் குறிப்பிட்டிருக்கிறார். இதனை மறுத்துள்ள லீனா மணிமேகலை, இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக பெண்கள்தான் ஆண்கள் மீது புகார் தெரிவிப்பது வழக்கம். தற்போது, ஆண் இயக்குனர் ஒருவர் பெண் மீது புகார் தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.