அயோக்கியன்! பெருச்சாளி! கிரிமினல்! விஷக்கிருமி! விஷாலை நாறடித்த இயக்குனர்கள்!

சென்னையில் நடிகர் சங்க தேர்தலில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியை ஆதரித்து திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் நடிகர் பாக்யராஜூக்கு ஆதரவாக பாரதிராஜா தொடங்கி சேரன் வரை பேசினர்.  விஷால் ஒரு அயோக்கியன்ர் இந்த சங்கத்தின் நிதியை எடுத்து கொண்டார் என்று ஒரே போடாக போட்டார். அடுத்து பேசிய சேரன், நடிகர் சங்க தலைவராக பாக்கியராஜ் தான் வர வேண்டும். விஷால் ஒரு மிக பெரிய கிரிமினல் ஆக வர வேண்டியவர். தயாரிப்பாளர் சங்க தலைவராகிவிட்டார். 

கேடு கெட்ட நிர்வாகத்தை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் நடத்தினர் ரசனை உள்ளவர்கள் தான் தலைவர் பதவிக்கு வர வேண்டும். விஷாலை போன்ற நன்றி கெட்டவர்கள் பதவிக்கு வர கூடாது  என்று கொந்தளித்துவிட்டு சென்றார் சேரன். பின்னர் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ஆர், இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறேன் என்ற பெயரில் இளைய ராஜாவுக்கே ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்தவர் தான் விஷால். தற்போது இளையராஜா உன் குத்தமா என் குத்தமா என்று விஷாலை நினைத்து பாட்டு பாடி கொண்டிருக்கிறார் என்று முடித்தார் கே.ஆர். 

முன்பெல்லாம் நடிகர்சங்கம், தயாரிப்பாளர் சங்க பதவிகளில் இருப்பவர்கள் தன்னடக் கத்துடன் ஒழுக்கத்துடன் இருந்தனர் ஆனால் தற்போது இருக்கும் விஷால் அப்படி இருப்பது போல் தெரியவில்லை.   நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கத்தில் பெருச்சாளி புகுந்தது போல் விஷால் புகுந்துவிட்டார் என்று பாரதிராஜா குறைபட்டுக் கொண்டார். இதனால் தமிழ்  சினிமாவே பாழாகிவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கும் பெயரை தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் என்று பாக்யராஜ் தலைவரான பிறகு மாற்றப்படும் என்று பாரதிராஜா தெரிவித்தார்.

நன்கு படித்த கருப்பு புள்ளி விஷால். விஷால் போன்ற அந்த கருப்பு புள்ளியை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும். விஷால் நன்கு படித்தவர் நன்கு ஊழல் செய்ய கூடியவர் என்று கிழித்து தொங்கவிட்டார் பாரதிராஜா.