அவ குடும்பம் நடத்த ஒத்துவரமாட்டா! நம்பர் நடிகைக்கு வில்லியான மாமியார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. அந்த நம்பர் நடிகைக்கும் சிவனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இயக்குனருக்கும் காதல் இருப்பது பலரும் அறிந்த விஷயம்.


ஒன்றாக ஊராக சுற்றி பண்டிகை காலங்களில் செல்பி எடுத்து போட்டு ரசிகர்களை கடுப்பேற்றுவது தான் இந்த ஜோடியின் அன்றாட பணி. கிட்டத்தட்ட இருவருமே தங்கள் காதலை ஒப்புக் கொண்டுவிட்டாலும் நடிகைக்கு சினிமாவில் பெரிய இலக்கு இருக்கிறதாம், இந்த இலக்கை அடைந்த பின்னர் தான் திருமணமாம்.

 நடிகையின் இயக்குனர் காதலர் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம், இருந்தாலும் காதலனின் அம்மா விடாப்பிடியாக சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம்.

 சமீபத்தில்கூட நம்பர் நடிகையும் இயக்குனரின் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. இந்த சேர்க்கையின்போது இருவரும் திருமணம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பர் நடிகை சற்று விடாப்பிடியாக முரண்டு பிடித்ததால் தற்போது திருமணம் வேண்டாம் என்று தள்ளி வைத்துள்ளாராம் இயக்குநர். ஆனால் தனது அம்மாவை எப்படி சமாதானப் படுத்துவது என தெரியாமல் பிதுங்கி நிற்கிறார் அதே சிவன் இயக்குனர். பொறுத்திருந்து பார்ப்போம் மாமியார் மருமகள் சண்டை தமிழ் சினிமாவிற்கு  புதிதா என்ன?