கனிமொழி, தமிழிசைக்கு எதிரான போட்டியிலிருந்து திடீர் எஸ்கேப்! கெளதமன் காசு வாங்கிவிட்டதாக புகார்!

தூத்துக்குடியில் கனிமொழி, தமிழிசை செளந்தர்ராஜனை எதிர்த்து நின்று வெற்றிபெறுவேன் என்று சூளுரைத்து வேட்புமனு தாக்கல் செய்தார் இயக்குனர் கெளதமன்.


வேட்பு மனு பரிசீலனையின்போது தமிழிசை, கனிமொழி படிவங்களில் சின்னச்சின்ன குறைகள் தென்படவே, அதுபற்றி தீவிர பரிசீலனை நடந்தது. தமிழிசையின் வேட்பு மனுவில் அவர் பாரத் பெட்ரோலியத்தில் இயக்குனராக உள்ள தகவல் விடுபட்டிருந்தது. அதேபோன்று கனிமொழி படிவத்தில் முகவரி குழப்பம் இருந்தது. 

இரண்டு பேரின் படிவத்தையும் ஆய்வுசெய்த தேர்தல் ஆணையம், இருவருடைய வேட்பு மனுவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. அதேபோல் இயக்குனர் கெளதமனின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழிசை மற்றும் கனிமொழியின் வேட்புமனு ஏற்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று அறிவித்திருக்கும் கெளதமன், அங்கு தேர்தல் முறையாக நடக்காது என்று சந்தேகப்படுகிறார். இதையடுத்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தமிழ் பேரரசு கட்சி சார்பில் இயக்குநர் கெளதமன் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை வாபஸ்  பெற்றார்.

கனிமொழி, தமிழிசையை எதிர்த்துப் போட்டியிடப் போகிறேன் என்றுதான் தூத்துகுடிக்கே சென்றார் கெளதமன், இந்த நிலையில் திடீரென அவர் வேட்புமனுவை வாபஸ் வாங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருப்பதாக நாம் தமிழர் தம்பிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

போட்டியில் இருந்து விலகுவதற்காக கனிமொழி, தமிழிசை ஆகியோரிடம் காசு கறந்துவிட்டார் என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். அடடே, இது நல்ல பிசினஸா இருக்கே. மேலும் இவர் கட்சி ஆரம்பித்ததே கல்லா கட்டத்தான் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.