இலியானாவுடன் பிரபல இயக்குனர் ஹோட்டலில் நடத்திய அந்த டிஸ்கசன்! ஸ்ரீரெட்டி வெளியிட்ட கிக் தகவல்

நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடிகை இலியானா பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சினிமா எத்தனை ஆண்டுகளுக்கு இருக்குமோ அதுவரை ஸ்ரீ ரெட்டியின் பெயரும் இருக்கும். அந்த அளவுக்கு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஸ்ரீ ரெட்டி. திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களும் கொடுமைகளும் நடந்து கொண்டிருப்பதாக அவர் அவ்வப்போது புகார் கூறிய வண்ணம் உள்ளார்.

அண்மையில் ராணாவின் குடும்பத்தினர் மீது அவர் குற்றம் சாட்டி இருந்தார். தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய பகீர் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் தேஜா மற்றும் நடிகை இலியானா டி குரூஸ் ஆகியோரை தொடர்பு படுத்தி அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் நடிகை இலியானாவை இயக்குனர் தேஜா தாஜ் பஞ்சாரஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து விவாதம் நடத்தியதாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

அனைத்தும் முடிந்த பிறகு கேமரா முன் நிற்பதற்கு தகுதி இல்லை என்று கூறி இலியானாவை அவர் நிராகரித்ததாகவும் ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டியிருக்கிறார். ஸ்ரீரெட்டி யின் புகார் இத்துடன் நின்றுவிடவில்லை. பார்ட் 2 விரைவில் வெளியாகும் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.