செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜியை பீட் செய்யும் திண்டுக்கல் சீனிவாசன்..! வேலை கிடைக்கும், ஆனா கிடைக்காது!

திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் நேற்று' முதல்வர் சிறப்பு மனுக்கள் தினம்' நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் பேசிய பேச்சின் பொருள் 24 மணி நேரம் கடந்த பிறகும் புரியாமல் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.


தன்னிடம் வேலைகேட்டு வரும் மக்களின் தொல்லையைப் பற்றி பேச வந்த அமைச்சர்' முன்பெல்லாம் பையன் 10ம் வகுப்பு படிச்சிருக்கான்னு கூட்டிக்கிட்டு வருவாங்க.இப்பப் பையன் இஞ்சினியருக்கு படிச்சிருக்கான்னு என்கிட்ட வந்து வேலை கேக்கறாங்க.

வனத்துறை மந்திரி என்பதால் தினமும் நூறு பேர் வேலை கேட்டு என்னிடம் வந்து நாங்கதான உங்கள ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம்.நீங்க வேலை குடுக்க மாட்டேங்க்றீங்க என்று சண்டை போடுவதாகச் சலித்துக்கொண்ட அமச்சர்,வனத்துறை காவலர் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து , படித்து தேர்வெழுதினால் வேலை வீடுதேடி வரும் என்று விளக்கினார்.

இதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது.சட்டென யூ டர்ன் அடித்த அமைச்சர் அடுத்து திண்டுக்கல் தண்ணீர் பிரட்சினைக்கு வந்தார்.செக்குக்கு மாடுதந்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணுத்தரமாட்டான்னு இருந்த நிலையை மாற்றி,இப்போது திண்டுக்கல்லில் இருக்கும் 48 வார்டிலும் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.உங்கள் பிள்ளைகளுக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வரும்.

ஒரு தேர்வுக்கு பத்துப் பேர் வீதம் அப்படி கடிதம் அனுப்புவார்கள். அந்த சமயத்தில் என்னிடம் வந்தால் உங்கள் பிள்ளையை முதலாவதாக கொண்டுவர நாங்கள் முயற்சி செய்வோம்,என்றார்.

சற்று நேரம் முன்பு,தேர்வுகள் ஆன்லைன் மூலம் நேர்மையாக நடக்கிறது. யாரையும் பார்த்து காசைக் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் என்கிற தொனியில் பேசிய அமைச்சர்,இப்போத் எங்களிடம் வாருங்கள்,நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.என்று பேசியதுதான் மக்களை கிறுகிறுக்க வைத்துவிட்டது.

ஜெயக்குமாரை எதிர்கட்சி தலைவரே புகழ்வதும்,செந்தில் பாலாஜியின் காமெடி பேச்சுக்கள் தினமும் பேப்பரில் வருவதும் திண்டுக்கல் சீனிவாசனை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்து விட்டதாகத் தெரிகிறது.