சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை கதறவைத்து வென்ற அஸ்வின் அணி!

TNPL தொடரின் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் கௌசிக் காந்தி தலைமையிலான சேபாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதியது . இந்த போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற சூப்பர் சூப்பர்கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல்  ட்ராகன்ஸ்  அணி ,  சேபாக் சூப்பர் கில்லிஸ்  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது . திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே அதிகபட்சமாக 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார் .இதை தவிர வேறு எந்த வீரரும்  நிலைத்து நின்று ஆடாததால்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல்  ட்ராகன்ஸ்  அணி 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது . சிறப்பாக பந்து வீசிய சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அலெக்சாண்டர் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் . சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார் .

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை சேசிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்  தொடக்கம் முதலே விக்கெட்களை பறிகொடுத்தனர். அந்த அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ஆரிப் ஆகியோர் மட்டுமே அதிகபட்சகமாக 16  ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சேபாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு  105 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் சார்பாக சிலம்பரசன் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.