சாலை ஓரமாக நின்ற கண்டெய்னர்! அதிவேகத்தில் பறந்த கார்! நேராக சென்று பின்னால் சொறுகிய பயங்கரம்! பதை பதைப்பு விபத்து!

திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பாடியை சேர்ந்த ஆரோக்கியம் இவரது மனைவி அருள் சகாய லதா மற்றும் அவர்களது உறவினர்களான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி ஜான்சி அவர்களது குழந்தை கஜோலின் ஆகிய 5 பேரும் காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு சிவகங்கை கிளம்பியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள உறவினரை வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

அப்போது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது காரை ஓட்டிய ஆரோக்கியராஜ் சிறிது தூக்கக்கலக்கத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரோட்டின் ஓரத்தில் பழுதடைந்து லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில் கார் வேகமாக வந்தபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது

இந்நிலையில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து காரின் இடிபாடுகளில் சிக்கிய அருள் சாகயா லதா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனம் விபத்தில் சிக்கியதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி அதில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடனே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்றும் விபத்தில் உயிரிழந்தார் அருள் சகாய லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.