சடன் பிரேக் போட்ட சொகுசு பேருந்து..! கட்டுப்பாட்டை இழந்து மோதி நொறுங்கிய கார்! பதை பதைக்க வைத்த திண்டிவனம் விபத்து!

திண்டிவனம் அருகே கார் மற்றும் சொகுசு பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே முன்னே சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் அதற்கு பின்னால் வந்த கார் பஸ்ஸின் பின்பக்க மோதியது இந்நிலையில் காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி காரில் வேகமாக மோதியதால் காரில் பயணம் செய்தவர்களுக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது .

அதில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த விபத்து காரணமாக இந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 72, இவர் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார்.

இவர் வெளிநாட்டில் இருந்து வரும் தனது மகன் செந்தில் மற்றும் மருமகள் லோகேஸ்வரி ஆகிய இருவரையும் விமான நிலையத்திலிருந்து அழைத்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது காரை பிரசாந்த் 27 என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் திண்டிவனம் அடுத்து சலாவதி அருகே வந்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு முன்னால் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். தனியார் சொகுசுப் பேருந்துக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால் அதிர்ச்சியடைந்த சொகுசு பேருந்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வேகமாக வந்த கார் சொகுசு பேருந்தில் பின்பகுதியில் மோதியதில் காரில் இருந்தவர்களுக்கு சிறிது அடி ஏற்பட்டது.

இந்நிலையில் காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரியும் காரின் மீது பலமாக மோதியது இதில் காரில் இருந்த செந்தில் மற்றும் லோகேஸ்வரி மற்றும் ஓட்டுநர் பிரசாந்த் மூவருக்கும் பலமான அடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விபத்தில் ஆறுமுகம் பலத்த காயத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த விபத்து குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது பின்னர் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.