ஷூ பாலிஷ்! ஐஸ் விற்பனை! சட்னி அரைப்பு! நூதன தேர்தல் பிரச்சாரம்! திண்டுக்கல்லை கலக்கும் மன்சூர் அலிகான்!

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.


இதற்காக திண்டுக்கல் சென்றுள்ள மன்சூர் அலிகான் மற்ற வேட்பாளர்களிடமிருந்து தனித்து தெரியும் வகையில் நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு உள்ளார்.

அந்த வகையில் இன்று காலை கொடைக்கானல் சென்ற மன்சூர் அலிகான் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் சென்றார். அங்கு ஒரு பெண் அம்மிக்கல்லில் சட்னி அரைத்துக் கொண்டிருப்பதை பார்த்த மன்சூர் அலிகான் அந்தப் பெண்ணை எழுப்பிவிட்டு தான் அம்மிக் கல்லில் அமர்ந்து சட்னி அரைக்க ஆரம்பித்தார்.

இதன்பிறகு கொடைக்கானல் கடைத் தெருவுக்கு வந்த மன்சூர் அலிகான் அங்கு கீரை விற்றுக்கொண்டு இருந்த ஒரு பெண்மணியிடமிருந்து கீரைக் கட்டுகளை வாங்கி கூவிக் கூவி விற்க ஆரம்பித்தார். பிறகு ஷூ பாலிஷ் போடும் ஒரு நபரிடம் சென்று அமர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஷூ பாலிஷ் போடும் வேலையையும் மன்சூர் அலிகான் செய்ய ஆரம்பித்தார்.

இப்படியே நூதனமுறையில் வாக்கு கேட்டு கொண்டே சென்ற மன்சூரலிகான் ஒரு இடத்தில் குப்பை அதிகம் இருப்பதை பார்த்து தானே அந்த குப்பைகளை அள்ளி சரி செய்ய ஆரம்பித்தார். 

மேலும் அறிவால் விற்பனை செய்யும் ஒரு கடைக்குச் சென்று அங்கிருந்த அரிவாளை எடுத்து எனக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் அவ்வளவுதான் என்று கூறி மிரட்டும் தொணியில் வாக்கு சேகரித்தார். இப்படி மன்சூரலிகானின் நூதன பிரச்சாரத்தால் திண்டுக்கல் பகுதிவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர்.