பெங்களூரு புகழேந்தியை கட்சியை விட்டு நீக்கமுடியாத பரிதாபத்தில் தினகரன்

மைக் கிடைத்தால் அரை மணி நேரம் விடாமல் பேட்டி கொடுப்பது தினகரன் ஸ்டைல். எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும் முகத்தில் சிரிப்பு குறையாமல் பதில் கொடுப்பார்.


அதுவெல்லாம் பழைய காலம் என்றாகிவிட்டது. தேர்தல் தோல்வி தினகரனை செல்லாக்காசாக்கிவிட்டது. ஒவ்வொரு நபராக அவரைவிட்டு வெளியே சென்றுவிட, அதிர்ச்சியில் ஊமையாகவே மாறிவிட்டார் தினகரன்.

தங்கதமிழ்செல்வன் கட்சியைவிட்டு வெளியேறி வேறு கட்சியில் சேர்ந்து பதவி வாங்கியபிறகும் அவரை கட்சியில் இருந்து இன்னமும் நீக்கவில்லை தினகரன். அதேபோன்று நான் உருவாக்கியதுதான் அ.ம.மு.க. என்று பெங்களூரு புகழேந்தி தைரியமாக பேட்டி கொடுத்துவருகிறார்.

தினகரனுக்கு அட்ரஸ் கொடுத்ததும் நானே என்றும் புகழேந்தி சொல்கிறார். இதையெல்லாம் கேட்டும் அவரை கட்சியில் இருந்து நீக்கமுடியாத சோகத்தில் இருக்கிறார் தினகரன்.

ஏனென்றால், அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் புகழேந்தியும், தங்கதமிழ்செல்வனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இப்போது தேர்தல் கமிஷனை அணுகினால், கட்சியை பதிவு செய்யமுடியாமல் போய்விடும். அதனால்தான் அண்ணன் தினகரன் அமைதியாக இருக்கிறாராம்.

முட்டை போண்டா என்று நமது எம்.ஜி.ஆர். திட்டிவரும் வேளையிலும் அண்ணன் அமைதியாக இருக்கும் காரணம் தெரிகிறதா?