ஒருவழியாக புகழேந்திக்கு கல்தா கொடுத்துட்டார் தினகரன்!

யார் போனாலும் எனக்குக் கவலை இல்லை என்று மெகா தெனாவெட்டாகத் திரிந்தவர் டி.டி.வி.தினகரன். ஆனால், அவருடைய கண்ணில் விரலைவிட்டு ஆட்டிவிட்டார் பெங்களூரு புகழேந்தி.


ஏனென்றால் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியை பதிவு செய்வதற்கான அபிடவிட்டில் முக்கியக் கையெழுத்து அவர் போட்டிருக்கிறார். அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால், மீண்டும் புதிதாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், புகழேந்தி எடப்பாடியாரை சந்தித்தது மட்டுமின்றி அ.ம.மு.க.வினரை இங்கிருந்து கடத்திக்கொன்டு போகவும் செய்கிறார் என்று சசிகலாவிடம் ஒப்பாரி வைத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அனுமதி வாங்கி வந்தாராம்.

அப்படின்னா அ.ம.மு.க.? அதை எப்படியும் பதிவு செய்ய முடியாது என்பது தினகரனுக்குத் தெரிந்தே விட்டதாம். அடப்போங்கப்பா.