3 எம்.எல்.ஏ. விவகாரத்தில் தினகரன் எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஆட்சியைத் தக்கவைப்பதற்காக எடப்பாடி எடுத்த புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையை, ஸ்டாலின் அதைவிட வேகமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியிருக்கிறார்.. ஏனென்றால் சபாநாயகர் ஏதேனும் நடவடிக்கை எடுத்துவிட்டால், அதன்பிறகு அத்தனை தொகுதிகளில் வென்றாலும் திமு.க.வின் ஆட்சிக் கனவு கலந்தே போய்விடும்..


அதனால், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் முன்பே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். உடனே அ.தி.மு.க.வினர் மூன்று பேரையும் அமுக்க முயன்றதில் பிரபு மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தினகரன் பக்கம் போய் நின்று, உச்ச நீதிமன்றத்தில் கேஸ் போட்டார்கள். இந்த நிலையில்  கட்சி விரோதச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லி மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் இனிமேல் சபாநாயகருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, மாறாக, உச்சநீதிமன்றத்துக்கு சபாநாயகர் விளக்கம் தரவேண்டும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு சபாநாயகரைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் அந்தக் கேள்வி ஏனென்றால் இதுவே பி.ஹெ.ச் பாண்டியனாக இருந்தால், உச்ச நீதிமன்றம் இப்படி தீர்ப்பு கொடுத்தாலும், அவர் கண்டுகொள்ளாமல் தீர்ப்பு கொடுத்துவிடுவார். யாரும், எதுவும் சபாநாயகரை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார். 

ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க. வெற்றி அடைந்ததா அல்லது அ.தி.மு.க. வெற்றி அடைந்ததா என்று சிலர் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த விஷயத்தில் வெற்றி அடைந்தது தினகரன் மட்டுமே. பிரபு மட்டுமின்றி மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இப்போதும் தினகரனையே தலைவர் என்று சொல்கிறார்கள். அதே நேரம் தி.மு.க. வெற்றிக்கு நான் உதவ மாட்டேன் என்று தினகரன் சொல்கிறார். இதையெல்லாம் பார்க்க அரசியல் களம் சூடுபிடிக்கப் போகிறது என்று நன்றாகவே தெரிகிறது.