நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று நீட் கொண்டுவந்தது சீட்டிங் வேலையா..? பா.ஜ.க. தில்லுமுல்லு அம்பலம். தினகரன் ஆவேச அறிக்கை

நீட் தேர்வு வந்த நேரத்தில் அதற்கு பா.ஜக.வினர் பல்வேறு சப்பைக்கட்டு பேசினார்கள். அதாவது, நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு ஏகப்பட்ட நுழைவுத் தேர்வு எழுதவேண்டியுள்ளது. ஆகவே, ஒரே தேர்வு நீட் எழுதினால் போதும் என்றார்கள்.


ஆனால், இப்போது மத்திய அரசு கல்லூரிகளுக்கு இனிசெட் என்ற தேர்வை அறிமுகம் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

மருத்துவ மேற்படிப்புகளில் சேர நீட் பி.ஜி. என்ற தேர்வு நடத்தப்படும் நிலையில், மத்திய அரசின் 11 கல்லூரிகளுக்கு மட்டும் இனிசெட் என்ற தனித்தேர்வு ஏன்? யாருடைய நலனுக்காக? ஒரு நாட்டுக்கு இரண்டு தேர்வு எதற்காக என்று கேள்வி எழுப்பியிருக்கிறர்கள். 

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சீர்மிகு நிறுவனங்கள் என்ற சிறப்புத்தகுதி எந்த அடிப்படையில் 11 நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது? தமிழக அரசின் நிதியில் நடத்தப்படும சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட கல்லூரிகள் எந்த வகையில் தேசிய சிறப்பு தகுதி பெற குறைந்தவை?

எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்போர், அங்கேயே மேற்படிப்பு தொடர வழங்கப்படும் Institutional Quota தொடரும் என அறிவிப்பது அநீதியானது அல்லவா? பிறரது வாய்ப்பை மறுக்கும் சுயநலம் அல்லவா? என்ற கேள்விகள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் டிடிவி தினகரன், ‘’மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு(INI CET EXAM) நடத்துவது ஏற்புடையதல்ல.. நீட் தேர்வு மூலம் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தன்னிச்சையாக பங்கு போட்டு கொடுக்கும் மத்திய அரசு, இதில் மட்டும் இப்படி ஓர் ஏற்பாட்டினை செய்வது கொஞ்சமும் நியாயமற்றது. மாநில உரிமைகளை நசுக்கி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முடிவுகள் வரலாற்றுப் பிழையாகிவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.