மீண்டும் குக்கர் சின்னத்தை வாங்கி காட்டுகிறேன்! டிடிவியின் அதிரடி சவால்!

சினிமாவில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் ராசி பார்ப்பார்கள் என்றால், அந்த விவகாரம் இப்போது அரசியல்வாதிக்கும் வந்துவிட்டது. அ.ம.மு.க.வில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது.


தினகரனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அத்தனை நிர்வாகிகளும் கிட்டத்தட்ட இருண்டுபோன முகத்துடன் வந்து சேர்ந்தார்கள். ஏனென்றால் பலர் சொந்த காசை செலவழித்து நொந்ந்து நூடுல்ஸ் ஆகியிருந்தனர் ஒருசிலர் கட்சி கொடுத்த காசை ஏப்பம் விட்டு வந்திருந்தார்கள்.

புத்திசாலித்தனமாக பணம் பற்றிய பேச்சையே தினகரன் எடுக்கவில்லை. ஆனால், யார் யார் எவ்வளவு செலவழிச்சீங்க, யாரெல்லாம் செலவழிக்கலைன்னு எனக்கு எல்லா தகவலும் வந்து சேர்ந்திடுச்சு. நான் நடவடிக்கை எடுக்கும்போது அது யாருன்னு உங்களுக்கே தெரியவரும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது, யாராவது எடுத்திருந்தா கொடுத்திடுங்க என்று சொல்கிறாராம், யாரும் மூச்சுகூட விடவில்லை.

தினகரனுக்கு ஆதரவாக பேசுவது போன்று, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவந்தால்தான் நாம் ஜெயிக்க முடியும் என்று பலரும் பேசினார்கள். இனிமேல் வாக்குச்சீட்டு நடைமுறைக்கு வராது, அதனால் ஜெயிக்கவும் முடியாது என்பதை தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். 

இந்த நேரத்தில்தான் பரிசுப் பெட்டி நல்ல சின்னம்தான், ஆனா இன்னமும் போய்ச் சேரலை. அதுக்குப் பதிலா குக்கரை வாங்குவோம், அதுதான் நமக்கு ராசி என்று ஒருவர் பேசியதும் மற்றவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். உடனே தினகரனும், நீங்க எல்லோரும் ஆசைப்பட்டா, அடுத்த தேர்தலுக்கு குக்கர் வாங்கிடலாம் என்று சொல்ல, ஆலோசனைக் கூட்டத்தில் கைதட்டலாம்.

சரவணா ஸ்டோர்ல போய் வாங்குவாரோ..?