திமுக பக்கம் சாயும் தினகரன் எம்எல்ஏக்கள் 2 பேர்! தமிழக அரசியலில் புதிய திருப்பம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆக இருக்கும் இரண்டு பேர் திமுகவிற்கு சென்றுவிடலாமா என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆக அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் செயல்பட்டு வந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இவர்கள் 3 பேரும் சைலன்ட் மோடுக்கு சென்று விட்டனர். தொடர்ந்து தினகரன் ஆதரவாளராக இருந்தார் எம்எல்ஏ பதவி பறிபோய்விடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

அதேபோல் மீண்டும் அதிமுகவிற்கு சென்றாலும் பழைய மரியாதை கிடைக்குமா என்று இவர்கள் யோசனையில் உள்ளனர். அறந்தாங்கி ரத்தினசபாபதி மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஏற்கனவே அங்கு மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சிவில் சமூகத்தை மீறி அரசியல் செய்ய முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் விருதாச்சலம் கலைச்செல்வன் கூட மாவட்ட அமைச்சரான எம்சி சம்பத்தின் ஹிட் லிஸ்டில் உள்ளார்.

எனவே மீண்டும் அதிமுகவிற்கு சென்றாலும் கூட இறந்த மரியாதையை மீண்டும் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. தினகரனுக்கும் அரசியல் எதிர்காலம் இல்லாததால் செந்தில் பாலாஜி வழியில் அதிமுகவில் ஐக்கியம் ஆகி விடலாம் என்று மூன்று பேரும் கடந்த 2 நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டதாகவும் பேசுகிறார்கள். ஆனால் தாங்கள் அதிமுக விலையே இருப்பதாகவும் இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்குதான் தாங்களும் இருக்கப்போவதாக கள்ளக்குறிச்சி பரப்பும் விருத்தாசலம் கலைச்செல்வனும் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ தினகரனை நம்பிச்சென்ற இந்த மூன்று பேரும் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக மிக விரைவில் மிக முக்கியமான ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.