தூக்கு மேடை தயார்! தூக்கிலிடவும் ஹேங்மேன் ரெடி! தனிமைபடுத்தப்பட்ட நிர்பயா குற்றவாளிகள்! 4 பேரின் உயிர் பறிபோகிறது!

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.


மண்டோலி சிறையில் தற்சமயம் நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தண்டனையை உடனடியாக நிறைவேற்றுவதற்கான பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளில் ஒருவரான பவண் குமார் குப்தாவை, மண்டோலி சிறையில் இருந்து திகார் சிறைக்கு ரகசியமான முறையில் இடம் மாற்றம் செய்துள்ளனர். அத்துடன், மற்ற 3 குற்றவாளிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான பாதுகாப்பு பணிகளில், தமிழக சிறப்பு போலீஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.  

இதுதவிர, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் அனுபவம் பெற்ற நபர்களை திகார் சிறைக்கு வரவழைத்து, அதற்குரிய ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர். இதனால், எந்நேரமும் குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக தூக்கிலிடப்படலாம் அல்லது ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுபற்றி திகார் சிறை நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மிக ரகசியமாக இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், அதற்கான தண்டனையை கடுமையாக்கும்படி பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, நிர்பயா வழக்கு இதில் மிக முக்கியமானதாகும். குற்றவாளிகளில் சிலர் டீன் ஏஜ் வயது என்பதால் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிகழ்ந்த ஐதராபாத் என்கவுன்டர் போல, இதனையும் உடனடியாக நிறைவேற்றினால் மக்களிடையே பாராட்டும், ஆதரவும் கிடைக்கும் என , மத்திய உள்துறை அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  

அதேசமயம், 4 பேருக்கும் ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றினால் அது மனித உரிமைமீறல் பிரச்னையாக வெடிக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.