வானில் வினோத வட்டத்தில் சிங்க வாகனத்தில் தோன்றிய பத்திர காளியம்மன்! 2 மாவட்ட மக்கள் சிலிர்ப்பு!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் சூரியனை சுற்றி வானவில் போன்ற வட்டம் தெரிந்ததால் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டும் இன்றி அதை தங்களிது செல்போனில் படம்பி பிடித்து மகிழ்ந்தனர்.


சேலம், நாமக்கல், கடலூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் வானவில் போன்று தெரிந்த காட்சிகள் சாலையில் சென்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அரிய ஒளிவட்டக் காட்சிகளை பார்த்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் சூரியனை சுற்றி வானவில் போன்ற ஒளிவட்டம் தெரிந்ததை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதே மாதிரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டின் பல பகுதிகளில் காலையில் சூரியன் உதித்துக் கொண்டு இருந்த போது அதனை சுற்றி கருப்பு நிற வட்டம் தெரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதை ஆச்சரியத்துடன் பலர் படம் பிடித்துக் கொண்டனர். இங்கு மட்டும் இன்றி கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று நாளாக கன மழை பெய்து வந்தது. இந் நிலையில் இன்று வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்த நிலையில் சூரியனை சுற்றி பல வண்ணங்களில் வட்டம் தெரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

சூரியன் சுற்றி தெரியும் ஒளிவட்டம் 22 டிகிரி ஒளிவட்டம் என கூறப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் சிரஸ் என்ற மெல்லிய மேகப் படலம் உருவாகிறது. இதில் இருக்கும் அறுகோண வடிவிலான பனி துகள்களின் வழியே சூரிய ஒளி கடந்து செல்லும் போது இது போன்ற ஒளிவட்டம் தோன்றுகின்றன.

பொதுவாக வானவில் மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் வானத்தில் தெரியும் இதை VIBGYOR (Violet, Indigo, Blue, Green, Yellow, Orange Red) என்று கூறுவர். அதாவது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, மற்றம் சிவப்பு நிறங்கள் வானில் தோன்றும்.

இதனிடையே வட்டத்திற்குள் சிங்க வாகனத்தில் பத்திரகாளியம்மன் இருப்பதாக கூறி பக்தர்கள் சிலர் சிலிர்த்துப் போயினர். மேலும் இந்த தகவலை வாட்ஸ் ஆப்பில் வேகமாக அனுப்பினர். இதனால் வானில் பத்திரகாளியம்மம் தோன்றிவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது மேகம் என்றும் சிறிது நேரத்தில் கலைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.