லேடி கெட்டப்பில் நம்ம நித்தியானந்தா பார்த்திருக்கீங்களா?

இந்த உலகத்திலேயே கொடுத்துவைத்த மனிதர்கள் யாரென்று பார்த்தால் சாமியார்கள்தான். பணத்தில் இருந்து பெண்கள் வரை தேடித்தேடி அவர்களிடமே போய்ச் சேர்கிறது. அதனால், அவர்கள் பண்ணும் லொள்ளும் கொஞ்சநஞ்சமல்ல.


அவர்களில் கேடிக்கெல்லாம் கேடி என்றால் நம்ம நித்தியானந்தாதான். நடிகை ரஞ்சிதா போன்ற பிரபல நடிகைகளே அவர் மடியில் போய் விழுகிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றி என்னதான் சொல்வது. அதனால் விதவிதமாக போதனை செய்வதை அப்படியே நம்புகிறார்கள்.

அந்த வகையில் இப்போது வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படும் நம்ம நித்தியானந்தா கொடுத்திருக்கும் போஸ் இப்போது வைரலாகப் பரவி வருகிறது. ஆம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சி வேடம் போட்டிருக்கிறார் நித்தி.

கையில் உயிருள்ள கிளியையும் வைத்திருக்கும் நித்தியைப் பார்த்து பக்தப் பெரியவாள் எல்லாம் கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். நல்லவேளையா பொம்பளை வேஷம் போட்டார், இல்லைன்னா சுந்தரேஸ்வரர் வேஷம் போட்டு மீனாட்சியா பக்தப் பெருமக்களை சுட்டிருப்பார்…

நல்லா இருப்பா நித்தி..