கனிமொழிக்கு பயந்தாரா உதயநிதி! திடீர் அறிக்கைக்கு திகில் பின்னணி!

சமீபத்தில் திருச்செந்தூரில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர்தான் இன்று உதயநிதி திடீரென ஓர் அறிக்கை கொடுப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடர்பாக ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் ஸ்டாலின் படத்தைவிட உதயநிதி படம் பெரிதாக் போடப்பட்டு இருந்தது. மிகவும் குட்டியாக கனிமொழி படம் போடப்பட்டது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் வழக்கமாக தி.மு.க. போஸ்டர்களில் இடம் பிடிக்கும் அண்ணா, கருணாநிதி படங்கள் இடம் பிடிக்கவில்லை. இப்படி போஸ்டர் போட எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று கனிமொழி மாவட்டச் செயலாளரை பிடித்து சத்தம் போட்டு டென்ஷன் ஆனதாக செய்தி பரவியது.

அதே நேரம், குறிச்சியிலும் பரிமளாதேவி என்பவர் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒட்டப்பட்ட போஸ்டரில் சம்பந்தமே இல்லாமல் உதயநிதி படம் புகுத்தப்பட்டது. இதிலும் கனிமொழி படம் சின்ன சைஸ் மட்டுமேதான் இருந்தது. இதற்கும் கனிமொழி தரப்பில் கோபம் காட்டப்பட்டதாம்.

பிரச்னை மீது பிரச்னை வரும்போது எதற்காக வெட்டியாக நாமே வம்பிழுக்க வேண்டும் என்றுதான் உதயநிதி பல்டி அடித்தாராம். இனி, நான் கலந்துகொள்ளாத நிகழ்ச்சியில் என் புகைப்படம் போடக்கூடாது என்றும் வருகையின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டு அறிக்கை கொடுத்தாராம்.

கனிமொழி மீது அந்த பயம் இருந்தா சரிதான்.