தமிழகம் முழுவதும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் மாணவிகள் மரணத்தை மறந்துவிட்டாரா ரஜினி? அமைதியாய் இருபதுயேன்?

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்திருக்கும் விவகாரம் அத்தனை மனிதர்களின் நெஞ்சத்தையும் வருத்தம்கொள்ள வைத்திருக்கிறது.


இதற்கு நடிகர் சூர்யா தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து இருக்கிறார். இவருக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை, அரசியலில் இறங்கி சேவை செய்வதாகவும் சொல்லவில்லை.

ஆனால், அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தமிழக மக்களுக்குப் பாடுபடுவதாகவும் சொல்லிவரும் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் இதுவரை வாயே திறக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி.

இத்தனைக்கும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லாத துரைமுருகன், தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி கொடுத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால்,தமிழகம் முழுவதும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் மாணவிகள் மரணத்தை மறந்தே போய்விட்டார்.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும், முதல்வர் பதவியில் உட்கார்ந்த பிறகு தான் இதுபோன்ற விஷயங்களில் கருத்து சொல்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாரோ ரஜினி..?