ஜி.கே.வாசனை விரட்டிவிட்டாரா மோடி? பா.ஜ.க.வுக்கு வந்த சோதனை!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வாய் வலிக்க கத்திக்கொண்டிருந்த தமிழிசையை கவர்னராக்கிய பிறகு, தமிழகத்துக்கு ஒரு தலைவர் நியமனம் போட முடியாமல் தத்தளித்து வருகிறது பா.ஜ.க.


ஜி.கே.வாசனை தங்கள் கட்சிக்கு இழுத்து, அவரை தலைவர் பதவிக்கு நியமனம் செய்யும் திட்டம் இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் பரவிவந்தன. இந்த நிலையில், இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஜி.கே.வாசன் சந்தித்தார்.

அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவோம்’’ என்று தேவையில்லாததை எல்லாம் சொன்னாரே தவிர, தமிழ் மாநில காங்கிரஸ் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு நேரடியாக எந்தப் பதிலும் தரவில்லை.

அதேபோன்று இன்று அமித் ஷாவை சந்திக்க இருந்த திட்டமும் நிறைவேறவில்லை. இதையடுத்து நம் டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். ஜி.கே.வாசனை பா.ஜ.க.வுக்கு இழுத்து, அவருக்கு எம்.பி. பதவி கொடுக்கும் திட்டம் மோடியிடம் இருந்தது. ஆனால், வாசன் உருப்படியாக எதையும் பிடிகொடுத்து பேசவில்லை என்றதும் வெளியே அனுப்பிவிட்டார். அதனால்தான் அமித்ஷா சந்திப்பு நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

உண்மையா வாசன்..?