நீரழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

முட்டை சைவமா அசைவமா என்று அந்தக் காலத்தில் இருந்து விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது. இப்போது தினம் ஒரு முட்டை சாப்பிடலாம் என்று சொல்லப்படுவது சரிதானா என்பதைப் பார்க்கலாம்.


தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. எடை குறைவான குழந்தைக்கு சத்துக்கள் அதிகரித்து உடல் எடையை சீராக்கவும் முட்டை உதவி செய்கிறதுமுட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்சத்து மற்றும் பாஸ்பரஸ் எலும்பு, பற்கள் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பங்காற்றுகிறது.

முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும் மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிக அளவில் உள்ளனஇதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முட்டை மட்டும் சாப்பிடலாம்.