பிரசவ வார்டில் படபடப்புடன் காத்திருந்த கணவன்! மனைவி, குழந்தையின் சடலத்தை கொடுத்த மருத்துவமனை! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

தர்மபுரி மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருக்கு பிறந்த குழந்தையும் மருத்துவமனையின் மெத்தனத்தால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.


தர்மபுரி மாவட்டம் செங்கொடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. கட்டிட தொழிலாளியான இவர்  தனது மனைவி ஜோதியை பிரசவத்துக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஜோதியின் வயிற்றில் குழந்தை இருந்த போது அது ஆரோக்கியமாக இருந்ததாகத்தான் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரசவ நேரம் நெருங்கியதையடுத்து மருத்துவமனையில் மனைவியை அனுமதித்த அவர், தாயும் சேயும் நலமுடன் வருவதை ஆவலோடு எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் காத்திருந்தார். ஆனால் நேற்று ஜோதிக்கு மருத்துவமனையில் குழந்தை இறந்தே பிறந்தது.

இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இரவே ஜோதிக்கு இரத்தப்போக்கு அதிகரித்தது. இதனால் அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மருத்துவமனையின் அலட்சிய சிகிச்சையே அவலங்களுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள ஜோதியின் உறவினர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்