ஹெல்மெட் இல்லையா? அப்போ வாங்க டூர் போகலாம்! இளைஞர்களை வளைத்துப் பிடித்து இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்ற போலீஸ்! தருமபுரி சுவாரஸ்யம்!

தர்மபுரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களை காவல்துறையினர் தங்களது வாகனத்திலேயே நீதிமன்றங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.


ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என காவல்துறையினர் சுமார் 70க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதிமன்றத்திற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து ஒருவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அண்மையில் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் பல்வேறு மக்கள் அதை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமலேயே வாகனத்தை ஓட்டி வருகின்றனர். ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்துக்கள் தான் இந்நிலையில் இதற்காக அரசாங்கம் அனைவரையும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வைத்து காவல்துறையின் ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல்  சென்றதால் சுமார் 70 நபர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் எந்த ஒரு அபராதமும் விதிக்காமல் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் மட்டுமே பெற்றுக் கொண்டு அவர்களை தங்களது காவல்துறை வாகனத்தில் ஏற்றி புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். 

அங்குள்ள புதிய நீதிமன்றம் கட்டடத்தை காவல்துறையினர் அவர்களுக்கு சுட்டிகாட்டியுள்ளனர் அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் போலீசாரால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் கோர்ட்டில் வந்து தான் எடுக்க வேண்டும். கோர்ட்டுக்கு வரும்போது இவ்வளவு காலதாமதம் ஆகும் மற்றும் எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றியும் காவல்துறையினர் அவர்களுக்கு புரியும் படி எடுத்துக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த ஒரு முயற்சி புதிதாக உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.