அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தை அருகில் ஆவிக் குழந்தை படுத்திருப்பதாக கருதிய தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நள்ளிரவு! தொட்டிலில் குழந்தை அருகே படுத்திருந்த பேய் குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த தாய் செய்த செயல்!
இல்லினாய்சை சேர்ந்த மரிட்சா சைப்ளஸ் என்பவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தை பக்கத்தில் ஆவிக் குழந்தை படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அங்க பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்தது.
ஒருவேளை தூக்கக் கலக்கத்தில் அப்படி தெரிவதாக நினைத்த பெண் அனைத்து லைட்டுகளையும் போட்டுவிட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். ஆனால் எதுவும் தென்படவில்லை. பின்னர் தன்னுடைய அறைக்கு வந்து பார்த்து மீண்டும் காமராவில் பார்த்தால் மீண்டும் ஆவிக் குழந்தை படுத்திருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். காலையில் எழுந்தவுடன் குழந்தையின் தொட்டிலை முழுமையாக பரிசோதித்த அவர் அப்போது கண்ட காட்சி அவரை சிரிப்பில் ஆழ்த்தியது.
அதற்க காரணம் குழந்தையின் தொட்டிலில் விரித்திருந்த துணியில் குழந்தையின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதுதான் காமிராவில் பார்க்கும்போது ஆவி போல தெரிந்திருக்கிறது. எப்போதுமே மெத்தைக்கு உறை போட்டுவிடும் அந்த பெண் அன்று மட்டும் போட மறந்துள்ளார். இதனால்தான் அந்த படம் காமிராவில் ஆவிக் குழந்தை போல் தெரிந்ததாகவும், தற்போது அதை எண்ணி வயிறு குலுங்க சிரிப்பதாகவும் தெரிவித்தார் மரிட்சா சைப்ளஸ்.