பட்டுக்கோட்டை பிரபாகர் மீது தேவிபாலாவுக்கு என்ன கோபமோ? சூர்யாவின் காப்பான் படத்துக்கு கடுப்பான விமர்சனம்!

சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் சினிமாக்களில் நுழைந்துவிட்ட போதும், தேவிபாலா இன்னமும் சின்னத்திரையைத் தாண்டி வரவில்லை.


அதனால் ஏற்பட்ட கோபமோ என்னமோ, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சினிமா கதை எழுதத் தெரியவில்லை எனும் அளவுக்கு காப்பான் படத்துக்கு விமர்சனம் செய்திருக்கிறார் எழுத்தாளர் தேவிபாலா. இதுதான் அவரது குட்டியூண்டு விமர்சனம். 

கே.வி.ஆனந்த்., பி.கே.பி., சூர்யா கூட்டணி என்ற பெரிய எதிர்பார்ப்புடன் போனால், கொஞ்சம் ஏமாற்றம்தான். இத்தனைக்கும் இவர்களின் உழைப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் எந்த குறையும் இல்லை. இயக்குநரின் மெனக்கெடல், பி.கே.பியின் காமடி கலந்த அர்த்தமுள்ள கூர்மையான அளவான வசனங்கள் நல்ல ஒளிப்பதிவு இத்தனை ப்ளஸ் இருந்தும் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு அயர்ச்சியும் ஆயாசமும் வருகிறது

.ஏன்? விளைநிலங்களை நாசப்படுத்தி விவசாயிகளின் அழிவுக்கு வழி வகுக்கும் அரசியல்வாதிகளின் அராஜக ஆட்டம்தான் படம்.அதை முறியடிக்கும் நாயகன். ஆனால் பார்ப்பவர்களுக்கு ஒரு பதட்டம் கடுகளவு கூட வரவில்லை.எங்கே கோளாறு. எமோஷன்.. காமடி.. காதல்.. சென்டிமென்ட் எதுவுமே அழுத்தமாக பதியவில்லை.

வசனம் கலகலப்பாக இல்லாவிட்டால் கதை கந்தலாகியிருக்கும். புதிய பிரதமர் காரெக்டர் விளையாட்டு பிள்ளையாக இருக்கட்டும். அந்த பதவிக்கொரு மரியாதை வேண்டாமா. அவர் க்ளப்புக்கு வந்து ஆடுவதிலிருந்து திரைக்கதையில் ஒரு திருப்பத்துக்காக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் அடிப்படையே ஆடுகிறது. விளைநிலம்.. சுரங்கம்.. தீவிரவாதம்.. என பல சங்கதிகளை திணித்து நெளிய வைத்து விட்டார்கள். அந்த க்ளைமேக்ஸ் அதிக நீளம். இசை கை கொடுக்கவில்லை. ஒரே ஆறுதல் மோகன்லால் மட்டுமே..காப்பான். கே.வி.ஆனந்தை காப்பானா.