கட்டுக்கு அடங்கா கவர்ச்சியுடன் கெட்ட ஆட்டம்! தமன்னா வைரல் வீடியோ!

சினிமா உலகில் தற்போது ட்ரெண்ட் ஆகி இருப்பது பேய் திரைப்படங்கள் தான்.


எல்லா மொழிகளிலும் பேய் திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்து உள்ளதை அடுத்து பல திரைப்படங்கள் பல பாகங்களாக எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த தேவி திரைப்படம் வெற்றிகரமாக ஓடி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில்  பெற்றது. இதில் நடிகர் மற்றும் நடன இயக்குனருமான பிரபு தேவா மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நடித்தனர்.   இதனையடுத்து தற்போது அதனுடைய இரண்டாவது பாகமாக "தேவி 2" என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர போகிறது.

கடந்த மாதம் தேவி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். தற்போது சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்திலிருந்து "ரெடி ரெடி" என்ற வீடியோ பாடல் ஒன்று திரைபடக்குழுவினர் சார்பில் வெளியீடப்பட்டது. வெளியீடப்பட்ட சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான வியூஸ்கள் வந்தது குவிந்தது.

காரணம் இந்த பாடலில் வரும் கவர்ச்சி புயல் நடிகை தம்மன்னா தான்.  ஆம் கட்டுக்கு அடங்காத அளவிற்கு மிகுந்த கவர்ச்சியான ஆட்டதை போட்டுள்ளார் நடிகை தமன்னா.  இது காண்போரை சற்று முகம் சுளிக்க வைக்கும் விதமாக இருக்கிறது என்றே கூற வேண்டும்.  இந்த பாடலை  பார்த்த பலரும் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

"தேவி 2" திரைப்படம் இந்த மாதம் 31-ஆம் தேதி திரைக்கு வெளிவர காத்திருக்கிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.