இனிமே தேவர் இனத்துக்கு சொந்தம் அவர் மட்டும்தான்! கார்த்தியை மிரட்டும் தினகரன் டீம்!

நடிகர் கார்த்தியை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லக்கூடாது என்று தினகரன் தரப்பு மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தேவர் இனத்தைச் சார்ந்தவர் வீடுகளில் முன்பு நடிகர் கார்த்திக்கிற்கு தனி மவுசு இருக்கும். அவர் படம் இல்லாத வீடே கிடையாது. ஃபார்வார்டு பிளாக் கட்சியில் இருந்தபோது கார்த்திக்கிற்கு தனி மரியாதை இருந்துவந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தேவர் சமுதாயம் ஒட்டுமொத்தமாக அ.ம.மு.க பின்னால் அணி வகுப்பது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. தேவர் சமுதாய ஓட்டுக்கள் தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் அப்படியே  டி.டி.வி தினகரனுக்குப் போகும் அபாயம் இருக்கிறது.

அதனால்தான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக்கை கூட்டிவந்து அ.தி.மு.க. கூட்டத்தில் களமிறக்கினார்கள். கார்த்திக் 5ம் தேதி தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட தேவர் சமுதாய கிராமங்களுக்குச் சென்று ''வெற்றிலை போட்ட ஷோக்கிலே'' பாட்டுப் பாடி தமிழிசைக்கு ஆதரவாய் பிரசாரம் செய்தார். இதைக் கண்டு தேவரின மக்கள் குஷியாகி இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் கார்த்திக்கிற்கு தினகரன் கட்சியில் இருந்து மிரட்டல் விடப்பட்டதாம். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது, தேவையில்லாமல் தேவர் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம் என்று அன்பாக எச்சரிக்கை விடப்பட்டதாம்.

இந்த விவகாரத்தை அடுத்து தொடர்ந்து பிரசாரம் செய்வதா என்று புரியாமல் விழித்துவருகிறார் கார்த்திக். நீங்க தைரியமா பிரசாரம் பண்ணுங்க என்று அ.தி.மு.க. உறுதி கொடுத்தாலும் அலறிப் போய் இருக்கிறார் கார்த்திக்.