தேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்பட்ட தங்க கவசம்.

வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்க கவசத்தை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக சார்பாக தனது தோழி சசிகலாவுடன் சென்று ரூ.4 கோடி மதிப்புள்ள 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


அதிமுக-வின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் மதுரை அண்ணாநகரிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியின்போது, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தேவரின் குடும்ப வாரிசான காந்தி மீனாள் நடராஜன் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 27-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்கள் நடைபெறவுள்ளதால், அந்த விழாவிற்காக தங்கக் கவசத்தை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குடும்ப வாரிசான காந்தி மீனாள் நடராஜனிடம் ஒப்படைத்தார்.